உலக சுற்றுலா விருது வழங்கலில் இலங்கைக்கு பலத்த ஏமாற்றம்
உலக சுற்றுலா விருது வழங்கல் வைபவத்தின் போது இலங்கை பலத்த எதிர்பார்ப்புடன் பல பிரிவுகளை இலக்கு வைத்து களத்தில் இறங்கிய போதும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியதாக சுற்றுலா பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
இலங்கையின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆசிய மட்டத்தில் ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தளம், சிறந்த சுற்றுலா அபிவிருத்திச் சபை, சிறந்த சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம், சிறந்த சுற்றுலா ஹோட்டல் மற்றும் ஆயுர்வேத ஹோட்டல் போன்ற துறைகளில் விருது வழங்குவதற்குப் பரிசீலிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்த போதும்
கடைசியில் அவற்றில் சிறந்த சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் தவிர அனைத்து விருதுகளையும் இந்தியா தனதாக்கிக் கொண்டிருந்தது. எஞ்சிய விருதையும் துருக்கி தட்டிக்கொண்டு விட்டிருந்தது.
இலங்கையின் ஏமாற்றம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுற்றுலா அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளை கடுமையாக திட்டியதாகவும் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
------------------- நன்றி -------------------
|
No comments:
Post a Comment